• Download mobile app
23 Mar 2026, MondayEdition - 3694
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைரல் நாயகி பிரியா வாரியருக்கு எதிராக போலீசில் புகார்

February 14, 2018 தண்டோரா குழு

சமூக வலைதளங்களில் வைரலான நடிகை பிரியா வாரியர் இஸ்லாமிய மத உணர்வை புண்படுத்திவிட்டதாக ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஒமர் லுலு இயக்கத்தில் உருவாகியுள்ள ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெறும் மாணிக்ய மலராய பூவி பாடல் உலக அளவில் பிரபலமாகியுள்ளது.

இதற்கு காரணம் அந்த பாடலில் நடித்துள்ள நாயகி ப்ரியா வாரியரின் கண்ணசைவுக் காட்சிகள் தான். இதன் மூலம் பல இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டார் என்றே சொல்லலாம். இதற்கிடையில், இப்பாடல் வைரல் ஆனதும் பிரியா வாரியர் மற்றும் படக்குழுவினர் மீது ஐதராபாத் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள ஃபால்க்னூமா காவல்நிலையத்தில் இஸ்லாமிய இளைஞர் ஒருவர் அளித்த  புகாரில் அந்த பாடலில், மெக்கா, இறைத்தூதர் முகம்மது தொடர்புடைய வரிகள் இடம்பெற்றுள்ளதாகவும் இது இஸ்லாமியர்களின் மனதை புண்படுத்துவதாகவும் கூறியுள்ளார்.

மேலும், பாடலை எழுதிய பாடல் ஆசிரியர், இசை அமைப்பாளர், இயக்குனர் மற்றும் நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, புகாரைப் பெற்றுக் கொண்ட காவல்துறையினர் பாடல் வரிகள் மற்றும் புகார் தொடர்பான ஆதாரங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். இதனைத்தொடர்ந்து  இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள படத்தின் இயக்குனர் ஒமர் லுலு, பாடலில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான வரிகள் ஏதும் இடம்பெறவில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க