• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வைகோவின் சதுரங்க பிளான்.

May 20, 2016 தண்டோரா குழு.

தமிழக சட்டசபைத் தேர்தலில் அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்பதை விட வைகோவை வைத்து ஆடிய சதுரங்கத்திற்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்ல முடியும்.

மூன்றாவது அணி என அழைக்கப்பட்ட மக்கள் நலக் கூட்டணி உருவானதே, அ.தி.மு.கவுக்கு சாதகமான சூழலை உருவாக்க வேண்டும் என்று தான் என ஆரம்பத்திலிருந்தே அரசியல் வட்டாரத்தில் கூறப்பட்டு வந்த கூற்று. இதை வைகோ உறுதிப்பட மறுக்கவுமில்லை அல்லது அதற்காக யார் மீதும் கோபப்படவும் இல்லை.
மாறாக, தான் அமைத்துள்ள கூட்டணியை மிகப் பெரிய மாற்று அணி என்பது போன்ற ஒரு மாயையை அவர் உருவாக்கினார்.

மக்களும் அதை நம்பத் தொடங்கினர். அவரது தலைமையில் உருவான நான்கு கட்சி மக்கள் நலக் கூட்டணி பின்னர் விஜயகாந்தை இழுத்த போதுதான் வைகோவை வைத்து ஜெயலலிதா போட்டுள்ள மாஸ்டர் பிளான் என்ற கூற்று உறுதி செய்யப்பட்டது.

அதன் பிறகுதான் வைகோ ஜெயலலிதாவை வெளிப்படையாக விமர்சிக்கத் துவங்கினார். ஆனாலும் பலர் அவரை அ.தி.மு.க இரண்டாவது அணி எனவே அழைத்து வந்தனர். அது தற்போது உறுதியானது போல் உள்ளது.
தேமுதிக – தமாகா – மக்கள் நலக் கூட்டணி வாங்கியுள்ள வாக்குகளைப் பார்த்தால் மொத்தமாக 6 சதவீதம் கூட வரவில்லை. இதில் அதிக இழப்பு யாருக்கு எனப் பார்த்தால் தே.மு.தி.கவிற்கு தான்.

கட்சி துவங்கியது முதல் ஒரு குறிப்பிட்ட சதவிகித ஓட்டுகளைப் பெற்று வந்த அவர், கடந்த முறை எதிர்க்கட்சி என்ற இடத்தையும் பிடித்தது. ஆனால் தற்போது அந்தக் கட்சி தன்னுடைய உண்மையான தொண்டர்களை இழந்ததோடு, வாக்கு வங்கியையும் இழந்து பரிதாபமான நிலையில் உள்ளது. அதே போலத்தான் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலையம்.

இரு கட்சிகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று வந்தன. ஆனால் தற்போது அதுவும் சேர்ந்து காலியானது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

விடுதலைச் சிறுத்தைகளின் பலத்தையும் குறைத்தது இந்தக் கூட்டணி. அனைவரது ஒட்டு வங்கியும் குறைந்த நிலையில் மதிமுக வெறும் 0.7 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
நாம் தமிழர் கட்சி கூட 0.8 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளது என்பது வைகோவின் அரசியல் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக மாற்றியுள்ளது.

இது போன்ற ஒரு கூட்டணியை அமைத்து தி.மு.கவிற்கு போகவேண்டிய அதிருப்தி ஓட்டுக்களைத் திசை திருப்பித் தேர்தலில் வாக்காளர்களை ஒரு குழப்பு குழப்பி அந்தச் சாக்கில் அ.தி.மு.க வெற்றிபெற வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் வைகோ.

இதனாலேயே அ.தி.மு.க வெற்றி பெற்றுள்ளது. உண்மையில் அதிமுகவினரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு காரணம் வைகோ தான் என நினைத்து தொண்டர்கள் அவருக்கு நன்றி கூறவேண்டும்.

மேலும் படிக்க