• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வேளாண் படிப்புகளில் சேர்வதற்கான தேதிகள் அறிவிப்பு !

May 2, 2019 தண்டோரா குழு

தமிழ்நாடு வேளாண்மை பல்கலையின் கீழ் உள்ள கல்லூரிகளில் வேளாண் இளநிலை படிப்புகளில் சேர வருகிற மே 8 ஆம் தேதி முதல் இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் அறிவித்து உள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலையின் 14 உறுப்பு கல்லூரிகள் மற்றும் 27 இணைப்பு கல்லூரிகளில், 10 இளநிலை படிப்புகள் உள்ளது. இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு மே 8 ஆம் தேதி முதல் www.tnau.ac.in/admission.html என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யலாம். ஜூன் 07 ஆம் தேதி விண்ணப்பம் பதிவேற்ற கடைசி நாளாகும். விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்த பின்னர், விண்ணப்ப கட்டணத்தை இணைய தள வங்கி சேவை அல்லது கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம். இத்தகைய வசதிகள் இல்லாதவர்கள் பதிவிறக்கம் செய்யப்பட்ட செலான் பயன்படுத்தி எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் கட்டணத்தை செலுத்தலாம்.

ஜூன் 10 முதல் ஜூன் 12 ஆம் தேதி வரை விண்ணப்பத்தில் பிழை திருத்தம் செய்யலாம். சிறப்பு ஒதுக்கீடுதார்ர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு – ஜூன் 11 முதல் ஜூன் 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. தொடர்ந்து தரவரிசை பட்டியல் வெளியீடு – ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவில்லை. இணையதளம் மூலமாகவே கலந்தாய்வு நடைபெற உள்ளது.

மேலும் படிக்க