• Download mobile app
21 Mar 2026, SaturdayEdition - 3692
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வேளாண் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு : திண்டுக்கல் மாணவி ஆர்த்தி முதலிடம்

June 22, 2018 தண்டோரா குழு

கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் இளநிலை படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை பல்கலைக் கழக துணைவேந்தர் வெளியிட்டார்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் கீழ் உள்ள கல்லூரிகளில் 13 இளநிலை வேளாண் பட்டப்படிப்புகள் உள்ளது.இந்த கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கு கடந்த மே 18 ஆம் தேதி முதல் ஜூன் 17 வரை இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டது.இதில் மொத்தம்  உள்ள 3,422 இடங்களுக்கு  48676 பேர் விண்ணப்பித்திருந்தனர்.இந்நிலையில் மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ராமசாமி இன்று வெளியிட்டார்.

இதில் திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி ஆர்த்தி 200 கட் ஆப் மதிப்பெண் பெற்று முதலிடத்தை பிடித்துள்ளார்.இரண்டாம் இடத்தை கொடுமுடியை சேர்ந்த மாணவி ஸ்ரீகார்திகா 199.67 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும்,கோவையை சேர்ந்த மேனகா 199.5 கட் ஆம் மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளார்.தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களில் 8 இடங்கள் மாணவிகள் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும்,இந்தாண்டு தரவரிசை பட்டியலில் பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட பிரிவிற்கான இடத்திற்கு சோபியா என்ற மாணவி 197.5 மதிப்பெண்ணும்,புவனேஸ்வரி என்கிற மாணவி 192.5 மதிப்பெண் பெற்றுள்ளனர்.இதேபோல அருந்ததிய வகுப்பை சேர்ந்த மாணவி கார்திகா 194.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

இது குறித்து துணைவேந்தர் ராமசாமி கூறுகையில்,

“மாணவர்கள் நினைக்கும் பாடப்பிரிவிலும் கல்லூரியிலும் மட்டுமே சேர வேண்டும் என நினைக்க கூடாது எனவும்,பெற்றோர்கள் மாணவர்களுக்கு படிப்புகளை தேர்வு செய்வதில் அழுத்தம் செய்யக் கூடாது எனவும் தெரிவித்தார்.

மேலும்,கோவையில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் 7ஆம் தேதிகளில் சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வும்,ஜூலை 9ம்தேதி முதல் 13ம் தேதி வரை பொதுப் பிரிவினருக்கான முதல் கட்ட கலந்தாய்வும் நடைபெறவுள்ளதாக தெரிவித்தார்.இதனை தொடர்ந்து இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 23ஆம் தேதி முதல் 27ம் தேதி வரை நடைபெறும் எனவும்,கலந்தாய்வுக்கு பின்னர் வகுப்புகள் ஆகஸ்ட் மாதம் ஒன்றாம் தேதி துவங்க உள்ளதாக கூறினார்”.

மேலும் படிக்க