October 1, 2020
தண்டோரா குழு
வேளாண்மை பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு கொரொனா தொற்று உறுதி வீட்டில் இருந்து ஊழியர்கள் பணிபுரிய துணை வேந்தர் உத்திரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு வேளாண்மை பலகலைக்கழகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் 25 பேருக்கு நேற்று கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள், வீடுகளில் இருந்து பணிபுரிய துணைவேந்தர் உத்திர விட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வேளாண்மை பல்கலைக்கழகத்தில் அத்தியாவசிய தேவைகளுக்கான ஊழியர்கள் மட்டும் பணிக்கு வந்துள்ளனர்.பல்கலைக்கழக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன் மூலமாக தொடர்ந்து நடத்தப்படும் என தெரிகிறது.ஒரே நாளில் வேளாண்மைப்பல்கலைக்கழக ஊழியர்கள் 25 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சக ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.