May 23, 2020
தண்டோரா குழு
கோவை மக்கள் சேவை மையம் சார்பில் “மோடி கிட்” நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறு கோவில் பூசாரிகள் மற்றும் சிறு கோவில் பூசாரிகள் 300 பேருக்கு பருப்பு, சர்க்கரை, உப்பு,ரவை,சோப்பு,சாம்பார் பொடி மற்றும் 5 கிலோ அரசி உள்ளிட்ட பொருட்களை பா.ஜ.கட்சியின் மாநில செயலாளர் வானதி சீனிவாசன் வழங்கினார். மந்திரங்கள் ஓதி கோவில் பூசாரிகள் பொருட்களை வாங்கி சென்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன்,
பேரிடர் காலத்தில் பாஜக, ஆர்எஸ்எஸ், மற்றும் அதன் அமைப்புகள் சார்பில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து உள்ளதாகவும் ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் தேசிய தலைவர் ஜேபி நட்டா ஒவ்வொரு கட்சி நிர்வாகிகள் குறைந்தது ஐந்து பேருக்கு உணவளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.இதனை தொடர்ந்து மோடி கிச்சன் ஆரம்பிக்கப்பட்டு லட்சக்கணக்கான மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டது.இதன் பின்னர் மோடி கிட் என்ற பெயரில் ஒரு குடும்பத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளது.
பாஜக சார்பில் 40 லட்சம் மக்களுக்கு மோடி கிட் வழங்கப்பட்டுள்ளது.கோவையில் இன்று 300 பேருக்கு மோடி கிட் வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆயிரத்து 500 பேருக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக நாளையும் கிராமப்புற இளைஞர்களுக்கு.மோடி கிட் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.திமுக துணைப் பொதுச்செயலாளர் இருந்த முன்னாள் சட்டமன்ற துணை சபாநாயகர் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து உள்ளது திராவிடக் கட்சிகளில் இருந்து மாற்றத்தை விரும்பும் வேண்டும் என்று நினைப்பவர்கள் அந்த சித்தாந்தத்தை ஒட்டி இருக்கக் கூடிய கட்சியில் இணைவது வாடிக்கையான ஒன்று என தெரிவித்தார்.
பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பிரசாரம் செய்த காரணமாக ஆர் எஸ் பாரதி கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனை திமுக பேச்சாளர்கள் கான எச்சரிக்கையாக பார்த்ததாக அவர் தெரிவித்தார். திமுக எம்பி தயாநிதி மாறன் மீது தாழ்த்தப்பட்டோர் ஆணையம் வழக்கு செய்துள்ளது.கொரோனா தொற்றை காரணம் காட்டி வேலை விட்டு நீக்குவது சரியானது அல்ல எனவும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் பெற பாரதிய ஜனதா கட்சி உறுதுணையாக இருக்கும் என்றார்.