October 8, 2020
தண்டோரா குழு
கோவை மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர் அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளால் பல்வேறு சலுகைகளும் அவர்களுடைய வாழ்வாதாரத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள சாடிவயல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடைய கோரிக்கைகளையும் அவர்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளையும் ஆய்வு செய்தார்.அப்பொழுது கல் குத்தி பதி என்னும் பகுதியில் வாழும் மலைவாழ் மக்களை நேரில் சந்தித்து அவர்களுடன் சேர்ந்து வயலில் இறங்கி நெல் நாற்று நட்டு ( பவானி நெல் வகை)அந்தப் பகுதி மக்களுடன் அவருடைய தேவைகள் என்ன வாழ்வாதாரம் எந்த அளவிற்கு உள்ளது என்பது பற்றி கேட்டறிந்தார்.
அப்பொழுது உடனே அந்த அதிகாரிகளிடம் மலைவாழ் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக தங்குதடையின்றி செய்து கொடுக்க வேண்டும் இந்த பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் எவ்வாறு உள்ளது. மேலும் இந்த பகுதியை சேர்ந்த மலைவாழ் மக்களுக்கு எந்த மாதிரியான பயிர்கள் விதை பயிர்கள் தேவைப்படுகின்றன என்பது குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.அதைத்தொடர்ந்து மலைவாழ் மக்களுக்கு என்னென்ன தேவைகள் உள்ளதோ அத்தனை தேவைகளையும் அதிகாரிகள் உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.