வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, தற்போது அணியின் பெயரை ‘விண்டீஸ்’ என அதிகாரப்பூர்வமாக மாற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 90 ஆண்டுகளை நிறைவு செய்து, 91வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதனை முன்னிட்டு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் அணியில் மாற்றங்களை கொண்டு வர அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது.
சமிபத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்களுக்கும், அணி நிர்வாகத்திற்கும் இடையே சம்பளப் பிரச்னை காரணமாக பிரச்னை ஏற்பட்டது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிக பாதிப்பு ஏற்பட்டது.
இதனை சரிசெய்ய வெஸ்ட் இண்டீஸ் அணியில், முழு மாற்றத்தை ஏற்படுத்தி மீண்டும் சிறப்பாக செயல்பட முயற்சிகள் எடுக்கப்படும். மேலும், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி நிர்வாகம் விளையாட்டு வீரர்களுடன் நெருக்கமாக இணைந்து பணியாற்றத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி பெயரை “விண்டீஸ்” என மாற்றி அதற்கான புதிய வலைத்தளத்தையும் உருவாக்கியுள்ளது.
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு
கோவை வடக்கு மாவட்ட கரும்புக்கடை பகுதி திமுக சார்பில் 4ம் ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
கோவையில் ஜெஎஸ்டபுள்யூ எம்.ஜி மோட்டார்ஸ் வின்ட்சர் புரோ என்ற பேட்டரி காரை அறிமுகம் செய்தது