• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ள நிவாரண தொகையாக 1௦ லட்சம் வழங்கிய கூகுள்

August 31, 2017 தண்டோரா குழு

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்தியா, நேபாள், மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளுக்கு நிவாரன தொகையாக 1௦ லட்சம் ரூபாய் வழங்குவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியா, நேபாள், மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால், பல லட்சம் மக்கள் மற்றும் குழந்தைகள் பாதிக்கப்படுள்ளனர். அவர்களை காப்பாற்ற முன் வந்துள்ள கூஞ் Goonj மற்றும் சேவ் தி சைல்ட் (Save the Child) ஆகிய தன்னார்வ தொண்டு நிறுவங்களுக்கு, 1௦ லட்சம் ரூபாயை கூகுள் நிறுவனம் அளித்துள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மூன்று நாடுகளில் உள்ள சுமார் 1,6௦,௦௦௦ மக்களை மீட்பதே சேவ் தி சைல்ட் Save the Child நிறுவனத்தின் நோக்கம் ஆகும். அந்த மக்களுக்கு தேவையான உணவு, வாழ்வாதார உதவி, தற்காலிகமாக தங்க தேவையான பொருட்கள், சுகாதார பொருட்கள் மற்றும் நீர் ஆதார மறுசீரமைப்பு ஆகியவற்றை அந்த நிறுவனம் செய்து வருகிறது.

மேலும்,வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான கல்வி சார்ந்த பொருட்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை வழங்கி, அவர்களுக்கு ஆறுதல் அளித்து வருகிறது.

இந்தியாவில் 9 மாநிலங்களிலுள்ள கிராமப்பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 75,௦௦௦ மக்களுக்கு தேவையான உணவுகள், பாய்கள், போர்வைகள், சுகாதார வசதிகளை செய்து கொடுக்க கூஞ் தன்னார்வ தொண்டு நிறுவனம் சேவை செய்து வருகிறது. அந்த இடங்களில் சாலைகள், மேம்பாலங்கள், மற்றும் பள்ளிகளை சீரமைக்க போவதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் படிக்க