• Download mobile app
07 Apr 2026, TuesdayEdition - 3709
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளலூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் மூலம் தினமும் 700 டன் குப்பைகள் அழிப்பு என தகவல்

March 8, 2022 தண்டோரா குழு

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 600 முதல் 700 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் தினமும் 800 முதல் 1,000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. இந்த குப்பைகள் அனைத்தும் வெள்ளலூரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான சுமார் 650 ஏக்கர் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கிடங்கின் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக்டன் அளவிற்கு தரம்பிரிக்கப்படாத குப்பைகள் தேக்கம் அடைந்து உள்ளன என கூறப்படுகிறது.

இந்த குப்பைகளால் அந்த பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், ஈக்கள் தொல்லையும் அதிகமாக காணப்பட்டது. இந்த குப்பைகளை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

வெள்ளலூர் குப்பை கிடங்கில் இருந்து தினமும் 600 முதல் 700 டன் வரை பயோ மைனிங் மூலம் குப்பைகள் அழிக்கப்பட்டு வருகிறது. தேங்கி இருக்கும் குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது, என்றார்.

மேலும் படிக்க