• Download mobile app
09 Apr 2026, ThursdayEdition - 3711
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெள்ளப்பெருக்கு காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது – வனத்துறை அறிவிப்பு

July 5, 2023 தண்டோரா குழு

கோவையின் முக்கிய சுற்றுலா தளமாக விளங்கும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கின் காரணமாக கோவை குற்றாலம் தற்காலிகமாக மூடப்படுகிறது என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.குறிப்பாக பூண்டி, வெள்ளியங்கிரி, கோவை குற்றாலம் ஆகிய பகுதிகளில் நேற்று முதல் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.நிலையில் இன்று காலை முதல் கோவை குற்றாலத்தில் மழை பெய்து வந்த நிலையில் மதியத்திற்கு மேல் நீரின் வரத்து அதிகமாகி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு தற்காலிகமாக கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

நீரின் வரத்து குறைந்து இயல்பான நிலைக்கு திரும்பியவுடன் கோவை குற்றாலம் மீண்டும் திறக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். இப்பகுதியில் பெய்த கனமழையின் காரணமாகவும் கோவை குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாகவும் சிறுவாணி நீர் பகுதி, நொய்யல் ஆறு, பகுதியில் உள்ள குளம் குட்டைகள் ஆகியவை வேகமாக நிரம்பின.

மேலும் படிக்க