• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும் – தமிழக அரசு

May 4, 2018 தண்டோரா குழு

வெளி மாநிலங்களுக்கு சென்று நீட் தேர்வு எழுதும் தமிழகமாணவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகை என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மருத்துவ படிப்பிற்கான வரும் 6ம் தேதி நடைபெறவுள்ளது. நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான்,கேரளா போன்ற வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் காலை 8.30 மணிக்க நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில்,நாளைக்கே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இதனால் மாணவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.இதனால் மாணவர்களுக்கு பலரும் உதவி புரிந்து வருகின்றனர்.இந்நிலையில் இது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பின்னர்,”நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்கள் மற்றும் அவர்களுடன் செல்லும் ஒருவருக்கு,இரண்டாம் வகுப்பு இலவச ரயில் டிக்கெட் வழங்கப்படும்” என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.அதுமட்டுமல்லாமல் மாணவர்களின் செலவுக்காக 1,000 ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.நீட் தேர்வுக்காக நுழைவுத் சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களிடம் மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.மேலும்,14417 என்ற இலவச தொலைபேசியில் இது தொடர்பான விவரங்களை மாணவர்கள் அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க