• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வெளிநாட்டுப் பூங்காவை போல அட்டகாசமாக காட்சி அளிக்கும் கோவை காந்தி பூங்கா

September 13, 2019 தண்டோரா குழு

செயற்கை நீர் வீழ்ச்சி,மலை,யோகா பயிற்சி மையம், கண்கவர் ஓவியங்கள் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களுடன் வெளிநாட்டுப் பூங்காவை போல கோவை காந்தி பூங்கா அட்டகாசமாக காட்சியளிக்கிறது.

கோவை மாநகராட்சி, மேற்கு மண்டலம் 24 ஆவது வார்டில் உள்ள காந்தி பூங்கா, மாநகரில் வசிக்கும் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாக விளங்கி வருகிறது. 1 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தப் பூங்காவில் காலை, மாலை நேரங்களில் குவியும் மக்கள், அங்குள்ள விளையாட்டு உபகரணங்களில் தங்கள் குழந்தைகளை விளையாட வைத்தும், நடைப் பயிற்சி மேற்கொண்டும் வந்தனர்.

இந்நிலையில், பூங்காவில் புல் தரை, விளையாட்டு கருவிகள், தளம் ஆகியவை சேதமடைந்ததால் கடந்த சில மாதங்களாக சீரமைப்புப் பணிகள் வேகமாக மேற்கொள்ளப்பட்டு வந்தன. 3.25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் செய்யப்பட்ட இப்பணிகள் நிறைவு பெற்று வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழக உள்ளாட்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்க துறை அமைச்சர் வேலுமணி திறந்து வைக்க உள்ளார். தற்போது வெளிநாட்டு பூங்காக்களை போல காட்சி தரும் இந்த பூங்காவில்,மக்களைக் கவரும் விதமாக செயற்கை நீரூற்று, மலை, நுழைவாயிலிருந்து தொடங்கி பூங்கா முழுவதும் புல்தரை, நடைப்பயிற்சித் தளம்,மக்கள் இளைப்பாற குடில், நீரூற்றுக்கு இடையே நடைப்பாலம், யோகா பயிற்சி மையம்,சிறுவர்களைக் கவரும் விதமாக தூரி, சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் மேலும், பூந்தோட்டம், அலங்கார வளைவுகள், சுவரோவியங்கள் ஆகியவை அமைக்கப்பட்டு அசத்தலாக காட்சி தருகிறது.

மேலும் படிக்க