April 30, 2020
தண்டோரா குழு
கொரோனா பொதுமுடக்கத்தால் வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள் தாயகம் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்கள், தாயகம் திரும்ப விரும்பினால்,அதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பலவும் பொது ஊரடங்கை அமல்படுத்தியிருக்கும் நிலையில், வெளிநாடுகளில் ஏராளமான தமிழர்கள் சிக்கியுள்ளனர்.அவர்களை தாயகம் அழைத்து வருவதற்கான சிறப்பு ஏற்பாடுகளை தமிழக அரசு எடுத்துள்ளது.அந்த வகையில், தமிழகம் திரும்ப விரும்புவோர், nonresidenttamil.org என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
தமிழகம் திரும்பு விரும்புவோரின் விவரங்களை அறியவும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யவும்,அவர்கள் தாயகம் திரும்பியதும் தனிமைப்படுத்தி வைக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யவும் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கையை அறியவும் இந்த இணையதளம் உதவும் என்று கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு [email protected] என்ற மின்னஞ்சலைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது