• Download mobile app
15 Dec 2025, MondayEdition - 3596
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வெடிகுண்டின் மேல் ‘Love From Manchester’ என்று எழுதிய இங்கிலாந்து வீரர்கள்

May 29, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து விமானப்படையால் ஐ.எஸ்.ஐ.எஸ்., தீவிரவாத அமைப்பை அழிக்க வைத்திருந்த வெடிகுண்டுகள் மேல் லவ் ப்ரம் மன்செஸ்டர் (‘Love From Manchester’) என்று எழுதியிருந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

சமீபத்தில் இங்கிலாந்தின் மன்செஸ்டர் நகரில் பரபல பாடகி அரியனா கிராண்டேவின் இசை நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துக்கொண்டனர்.ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சார்ந்த சல்மான் அபேடி என்பவர் அந்த நிகழ்ச்சியில் மனித வெடிகுண்டாக செயல்பட்டதில், 22 பேர் உயிரிழந்தனர் 119 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இங்கிலாந்து விமான படை ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

ராயல் எர் போர்ஸ் (Royal Air Force) என்ற பிரிட்டிஸ் விமானப் படை வீரர் ஒருவர் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் மீது தாக்குதல் நடத்த வைக்கப்படிருந்த வெடிகுண்டில் லவ் ப்ரம் மன்செஸ்டர் (‘Love From Manchester’) அதாவது மன்செஸ்டரில் இருந்து வரும் அன்பு பரிசு என்று எழுதியிருந்தது.

“இணையதளத்தில் வெளியாகிய புகைப்படம் உண்மையானது. ஆயுதத்தில் எழுதப்பட்டிருந்த செய்தியின் உணர்வு புரிந்துக்கொள்ளத்தக்கது என்று ராயல் எர் போர்ஸ் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கவின் பியர்ல் ஹர்பர் (Pearl Harbor) யை ஜப்பான் நாடு தாக்கியது. அதற்கு பதில் தாக்குதல் தந்த அமெரிக்காவின் வெடிகுண்டுகளில் போர் வீரர்கள் இதுபோன்ற செய்திளை எழுதினர். அதேபோல் அமெரிக்காவில் 9/11 தாக்குதலை கண்டித்து, நியூயார்க் காவல்துறை மற்றும் தீயணைப்பு படையினர் பயன்படுத்திய வெடிகுண்டுகளில் இது போன்ற செய்திகள் காணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க