• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீரமரண அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிதியளிக்க முன்வந்த மாற்றுதிறனாளி ஆராய்ச்சியாளர்!

March 4, 2019 தண்டோரா குழு

புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடியை நிதியாக அளிக்க உள்ளதாக மும்பையை சேர்ந்த மாற்றுதிறனாளி ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

காஷ்மீரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சிஆர்பிஎப்) சேர்ந்த 2,500 வீரர்கள் 78 பேருந்துகளில் ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையை கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி கடந்து சென்றனர். அப்போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டிருந்தபோது தற்கொலை படை தீவிரவாதி ஒருவன், வெடிபொருட்கள் நிரப்பிய வாகனத்தை வேகமாக ஓட்டி வந்து வீரர்கள் இருந்த பேருந்து மீது பயங்கரமாக மோதினான். இதில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 20க்கும் மேற்பட்ட வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ் இ முகமது என்ற தீவிரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த கொடூர தாக்குதலால் நாடு முழுவதும் மக்கள் கொந்தளித்துள்ளனர். தாக்குதல் சம்பவத்துக்கு இந்திய மற்றும் உலக நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மும்பையை சேர்ந்த 44 வயதாகும் முர்தாஜ் ஏ.ஹமீது என்ற மாற்றுதிறனாளியான இவர் தற்போது மும்பையில் ஆராய்ச்சியாளராகவும் இருந்து வருகிறார். இவர் புல்வாமா தற்கொலைப்படை தாக்குதலில் வீரமரணம் அடைந்த 40 வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ.110 கோடி நிதியை பிரதமர் தேசிய மீட்பு நிதிக்காக வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த தொகையை பிரதமரை சந்தித்து நேரடியாக கொடுப்பதற்காக பிரதமர் அலுவலகத்திற்கு இமெயில் மூலம் அனுமதியும் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுகையில்,

நம் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களின் தியாகம் ஒவ்வொரு இந்திய குடிமகனின் ரத்தத்திலும் கலந்துள்ளது. இந்த எண்ணம் தான் அவர்களுக்கு உதவ வேண்டும் என என்னை தூண்டியது என்றார். தான் சேர்த்து வைத்த சம்பள பணத்தில் இருந்து இதனை அளிக்க விரும்பி இந்த முடிவை எடுத்ததாக இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க