• Download mobile app
04 May 2024, SaturdayEdition - 3006
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டை விட்டு வெளியே வந்து முள்வேலி கல்லுப்பாறையில் படுத்து என் வாழ்நாட்களை கழித்தேன்– முதியவரின் வேதனை

April 7, 2018 பி.எம்.முஹம்மது ஆஷிக்  

கோவை மாவட்டம் டவுன் ஹால் பகுதியில் அழுக்கு உடையில் நரைத்த முடியுடன் சுமார் 75 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் வயிறு வீங்கி மயங்கிய நிறையில் படுத்து கிடந்துள்ளார். அங்கிருந்த பொதுமக்கள் அவருடைய நிலையை பார்த்து மனம் இழகி 108 ஆம்புலன்ஷிற்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள் வந்து அவரை சோதனை செய்து பார்த்து அவர் நலமுடன் தான் இருக்கிறார் சாப்பிட்டால் சரியாகி விடுவார் என்று சொல்லிவிட்டு கிளம்பியுள்ளனர்.

அங்கிருந்தவர் சாப்பாடு மட்டும் வாங்கி கொடுக்காமல் அவருக்கு உதவ நினைத்து ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு தொடர்பு கொண்டு அவருடைய நிலையை எடுத்து கூறியுள்ளனர். பின்னர், அங்கு சென்ற ஈநெஞ்சம் அறக்கட்டளையினர் அவரை மீட்டு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். பின்னர், அவரின் குடும்பத்தை பற்றி விசாரித்துள்ளனர். அப்போது அவரது பெயர் பால்ராஜ் என்பதும் சொந்தா ஊர் ராஜபாளையம் என்பது தெரியவந்தது.அதனை தொடர்ந்து அவரது உறவினரை தேடும் முயற்சியை ஈரநெஞ்சம் அறக்கட்டளை மேற்கொண்டனர்.

அதன் படி இராஜபாளையம்  காவல்துறை உதவியுடன் இராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரத்தில் பால்சாமியின் மகள் குருஜோதியிடம் பால்சாமி முதியவரைப் பற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் மூலம்  பால்சாமி  முதியவரின் மகள் குருஜோதி மற்றும் அவரது குழந்தைகளும் உடனடியாக கோவையில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு வந்து தாத்தாவை அழைத்து சென்றனர்.

பால்சாமி  தாத்தாவின் மகள் குருஜோதி கூறும்போது,

குடும்பத்தில் ஏற்பட சில மன சங்கடத்தினால் என்னுடைய அப்பா கடந்த ஒருவருடத்திற்கு முன் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டார். பல இடங்களில் தேடியும் எங்கும் கிடைக்கவில்லை. திடீரேனே நேற்று இரவு காவல் நிலையத்தில் இருந்து ஒரு காவலர் வந்து உங்கள் தந்தை கோவையில் உள்ள ஈரநெஞ்சம் அறக்கட்டளையில் இருப்பதாக தகவல் கொடுத்தார். உடனடியாக அப்பாவை அழைத்து செல்ல வந்தோம். என்னுடைய அப்பாவை மீட்டுக் கொடுத்த ஈரநெஞ்சம் அறக்கட்டளைக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று கூறி பால்சாமி தாத்தாவை அழைத்துச் சென்றனர்.

இது குறித்து பால்ராஜ் தாத்தாவிடம் பேசினோம்,

குடும்பத்தில் எனக்கு ஏற்பட்ட மன சங்கடத்தால் கையில் சில துணிகளையும் பணத்தையும் எடுத்து கிளம்பினேன். ஆனால்,வழியில் சில திருட்டு பயலுக எல்லாத்தையும் பிடுங்கி பிச்சைக்காரன் போன்று என்னை அலையவிட்டனர். என்ன செய்தென்று தெரியாமல் திரும்ப செல்ல மனம் இல்லாமல் நடந்தே பல ஊர்களுக்கு சென்றேன். என் விதி என்ன செய்வதென்று தெரியாமல் கல்லுப்பாறை, மழை, வெளியில், முள்வேலி என ஒதுங்க கிடைக்கும் இடத்தில்எல்லாம் படுத்தேன். பசி மயக்கம் இருந்தாலும் யார் பணத்தையும் திருடாமல் மற்றவர்களிடம் உதவி கேட்டேன். கிடைக்கும் பணத்தில் சாப்பிட்டு இறுதி நாட்களை கழித்து வந்தேன்.சோறு சாப்பிட்டு பல நாட்கள் ஆகின்றது சோறு கொடுக்கவும் ஆல் இல்லை. முதுமையின் காரணமாக எந்த ஊரில் இருக்கேன் என்று தெரியாத நிலைக்கு வந்துவிட்டேன். இறுதியில் வீட்டிற்கு செல்ல எண்ணினேன் ஆனால் எப்படி செல்வது என்று தெரியவில்லை யாரும் என்னை தேடியும் வரவில்லை எனக்கு யாரும் உதவவும் இல்லை. இப்படி பல மாதங்கள் கழிந்தன. பின்னர், பசி மயக்கத்தில் கிடந்த என்ன சிலர் மீட்டு என் குடும்பத்துடன் சேர்ந்துள்ளனர். அவர்களுக்கு நன்றி.. இனி என் கடைசி நாட்களை என் குடும்பத்துடன் கழித்தால் அதுவே போதும் என்றும் கண்ணீருடன் சென்றார்.

இது குறித்து ஈரம் நெஞ்சம் அறக்கட்டளை மகேந்திரன் கூறும்போது,  

பொதுவாக இது போன்று சாலையில் இருப்பவர்களை பார்க்கும் நம்மில் பலருக்கும் அவர்களுக்கு உதவ தோன்றும். அப்படி அவர்களுக்கு உதவ நினைத்தால் நாம் அவர்களிடம் நீங்கள் யார்? இங்கே எப்படி வந்தீர்கள் என்று கேளுங்கள். அவர்கள் கொடுக்கும் தகவலை வைத்து நம்மால் முடிந்த உதவி செய்யலாம். இதன் மூலம் பலரும் தங்கள் உறவுகளை கண்டுபிடிக்க முடியும். ஏனெனில் பலரும் இது போன்று எங்கு செல்வது எப்படி செல்வது என்பதை மறந்து சாலையிலேயே தங்கள் வாழ்கையை கழித்து வருகிறார்கள் என்றார்.

சாலையில் பரிதாமான நிலையில் இருப்பவர்களை பார்த்து மனம் வருந்தும் பலர் இதுபோன்று நம்மால் முடிந்த உதவியை செய்தால் முதுமை காலத்தில் வாழும் அந்த குழந்தைகள் இறுதி நாட்களில் தங்கள் குடும்பத்துடன் வாழும் சந்தோஷம் அவர்களுக்கு கிடைக்கும்..

 

 

 

 

மேலும் படிக்க