• Download mobile app
21 May 2025, WednesdayEdition - 3388
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வீட்டு விநியோகம் (எச்டி) மற்றும் லாஜிஸ்டிக் நெட்வொர்க்கை மேம்படுத்தும் ஆம்வே இந்தியா

September 11, 2020 தண்டோரா குழு

ஆம்வே இந்தியா அதிகரித்துவரும் ஆன்லைன் ஆர்டர்களை ஆதரிக்க அதன் வீட்டு விநியோகம் (எச்டி) மற்றும் லாஜிஸ்டிக் நெட்வொர்க்கை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. ஆம்வே, இலக்கு சார்ந்த முடிவுகளை அடைய இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆப்லைனை ஆன்லைனோடு (020) இணைக்கும் பணியைத் தொடங்கிவிட்டது.

இந்நிறுவனம் பிப்ரவரி 2020 இல் 33.6% இல் இருந்து இன்று வரை 70% க்கும் மேல் கணிசமான அளவில் ஆன்லைன் விற்பனை மாற்றத்தைக் கண்டுள்ளது.இந்த போக்கு நீடிக்கும் என்று ஆம்வே எதிர்பார்க்கிறது.மேலும் இந்த ஆண்டின் இறுதிக்குள் ஆன்லைன் ஆர்டர்கள் மாதத்துக்கு 5-6 லட்சத்தை அடையும் என்று எதிர்நோக்குகிறது.

இது குறித்து ஆம்வே இந்தியாவின் சிஇஓ அன்ஷு புத்ராஜா கூறுகையில்,

கடந்த சில மாதங்களில், நுகர்வோர் நடத்தையில் நாம் ஒரு வேகமான மாற்றத்தை கண்டுள்ளோம், குறிப்பாக சில்லறை வணிகத்தில், மக்கள் பொருள் வாங்குவதற்கு ஆன்லைன் தளங்களுக்கு அதிகஅதிகமாக மாறிவருகிறார்கள்.ஆம்வேயும் அதுபோன்றதொரு போக்கை கவனித்துள்ளது. வலைத்தள விற்பனை இரட்டிப்பானதால், வீட்டு விநியோக ஆர்டர்களிலும் ஒரு குறிப்பிடத்தக்க மேல்நோக்கிய மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாங்கள் எங்கள் விநியோக சங்கிலியையும் லாஜிஸ்டிக்ஸையும் வலிமைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு பணியாற்றி வருகிறோம். சேமிப்பு கிடங்குகள், மனிதவளம், புதிய லாஜிஸ்டிக்ஸ் பங்காளர்கள், சேமிப்பு கிடங்குகளை இயந்திரமயமாக்கல், மற்றும் பிற பேக்-எண்ட் செயல்முறைகள் ஆகியவற்றை இணைத்து, வீட்டு விநியோக அனுபவத்தை மேம்படுத்த நாங்கள் இந்திய ரூபாய் 30 கோடிகளை முதலீடு செய்ய உள்ளோம். நாங்கள் முன்னோக்கி நகரும்போது,நுகர்வோர் போக்குகள் மற்றும் நடத்தையின் வழிகாட்டுதலோடு ஆன்லைனில் பிருமாண்டமான கவனம் செலுத்தப்படும் ஆம்வே இந்தியாவின் எதிர்கால உத்திமுறையில் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஆகிய இரு தளங்களும் ஒரு முக்கிய கூறாக மாறும் என கூறினார்.

வளர்ந்துவரும் ஆன்லைன் ஆர்டர்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் பற்றி ஆம்வே இந்தியாவின் குளோபல் ஆம்னி சேனல் லாஜிஸ்டிக்ஸ் துணைத்தலைவர் சஞ்சீவ் சூரி
பேசும்போது,

தற்போது நாங்கள் 2.8 லட்சம் வீட்டு விநியோகங்கள் செய்கிறோம். இது எங்கள் மொத்த விற்பனையில் 70%-80% ஆகும். மார்ச் மாதத்துக்கு முன் இது 1 லட்சம் வீட்டு விநியோகங்களாக இருந்தன. இது எங்கள் மொத்த விற்பனையில் ஏறக்குறைய 40% ஆகும். ஆன்லைன் ரிடர்ன் சேவைகளை அடுத்த ஆண்டில் தொடங்க திட்டமிட்டு வருகிறோம் என்றார்.

மேலும் படிக்க