June 4, 2020
தண்டோரா குழு
கோவையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற வயதான தம்பதி யினரை அரிவாளை காட்டி
மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ரத்தினபுரி கல்கி வீதியை சேர்ந்தவர் மரிய பிரகாசம்.இவரது இல்லத்தில் ஜெயா என்பவர் கடந்த ஜனவரி மாதம் வாடகைக்கு குடியேறியுள்ளார். ஜெயா தனது மகள் மற்றும் தாயாருடன் குடியேறிய நிலையில் வீடு வசதியாக இல்லை என கூறி சில தினங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார்
வாடகைக்கு வந்தபோது 20,000 ரூபாய் முன்பணமாகவும் வாடகை 5500 ரூபாய் எனவும் பேசப்பட்டது. ஆனால் ஜெயா பத்தாயிரம் ரூபாய் மட்டும் கொடுத்து இருந்த நிலையில் மீதி தொகையை கொடுக்க முடியாது எனவும் இரண்டு மாதங்களில் வீட்டை காலி செய்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில்,கொரோனா பரவல் காரணமாக அடுத்து வேறு வீடு செல்ல முடியாத நிலையில் வாடகை கொடுக்காமல் ஜெயா மற்றும் அவரது குடும்பத்தினர் இதே வீட்டில் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.இந்நிலையில் வீட்டு வாடகை கேட்டு சென்ற 85 வயதான தம்பதியினரை அரிவாளை காட்டி ஜெயாவும் அவரது குடும்பத்தினரும் மிரட்டி உள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.