• Download mobile app
22 Sep 2026, TuesdayEdition - 3877
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டில் யாருமில்லை நீ உள்ளே வா – இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் !

June 30, 2020 தண்டோரா குழு

கோவையில் இளம் பெண்ணுக்கு முதியவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் அப்பெண் சாணிபவுடர் குடித்துள்ளார்.

இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் துப்புரவு வாகன ஓட்டுநராக பணியாற்றி வந்தவர் ராஜன்(55). இவர் கடந்த 20 வருடமாக தமிழக அரசின் நிரந்தர பணியாளனாக இருக்கின்றார். 28 வயதுடைய பெண் ஒருவர் கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக ஒப்பந்தப் பணியாளராக இருகூர் பேராட்சி பேரூராட்சியில் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றார்.

இதற்கிடையில்,ராஜன் அப்பெண் வாகனத்தில் வரும் போதும் தனிமையில் இருக்கும் போதும் அவ்வப்போது சீண்டி தொந்தரவு கொடுத்துள்ளான்.இன்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருக்கிறார்.இந்நிலையில்,ராஜதுரை அவர் வீட்டின் அருகாமையில் பணி இருப்பதாக அழைத்துச் சென்று இன்று என் வீட்டில் யாரும் இல்லை நீ உள்ளே வா என்று 28 வயது இளம்பெண்ணை சீண்டி தொடர்ந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளான். பின்னர் பயந்து அந்த பகுதியில் இருந்து வீட்டுக்கு சென்ற அப்பெண் சானி பவுடரைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இச்சம்பவம் அறிந்த சுற்றத்தினர் குற்றச் சம்பவத்தை போலீசில் தகவல் கொடுத்த வேளையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்து உதவினர்.குற்றம் சுமத்தப்பட்ட இராஜதுரையிடம் போலிஸ் உரிய விசாரணை நடத்த பெண் தரப்பில் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

மேலும் படிக்க