• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வீட்டில் பீரோவை உடைத்து 6.5 பவுன் நகை கொள்ளை

November 11, 2021 தண்டோரா குழு

கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் அருகே உள்ள தட்டாம்புதூர் பகுதியை சேர்ந்தவர் பொன்னம்மாள் (65). இவரது கணவர் ஆண்டு இறந்து விட்டார், பொன்னம்மாளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவருக்கும், திருமணம் முடிந்து விட்டது. மூத்த மகள் சுமதி, அவிநாசி அருகேயுள்ள தெக்கலூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் பொன்னம்மாள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டை பூட்டிவிட்டு சுமதியின் வீட்டிற்கு கடந்த 3ம் தேதி சென்று விட்டார், நேற்று இரவு 7 மணி அளவில் பொன்னம்மாள் தட்டாம்புதூரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த 6.5 பவுன் நகையும் மாயமாகி இருந்தது. அதை யாரோ மர்மஆசாமி திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பொன்னம்மாள் அளித்த புகாரின்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்க