• Download mobile app
14 May 2025, WednesdayEdition - 3381
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“வி பிசினஸ்” நிறுவனத்தின் வி க்ளவ்ட் ஃபயர்வால் புதிய பாதுகாப்பு சேவை அறிமுகம்

June 9, 2021 தண்டோரா குழு

மிக துரிதமாக வளர்ச்சிக்கண்டு வரும் டிஜிட்டல் தொழில்நுட்பம், வீட்டில் இருந்தபடியே அலுவலகப்பணிகளை மேற்கொள்வது, பணிகளை முடித்தபின் அவற்றை க்ளவ்ட் தொழில்நுட்ப நினைவகத்திற்கு மாற்றுவது என இவையனைத்தும் நிறுவனங்களின் அன்றாட செயல்பாடுகளுக்கான மிக வலுவான, நம்பகமான பாதுகாப்பு தீர்வுகளுக்கான மிகப்பெரும் தேவைகளை உருவாக்கி உள்ளன. இதனால் தன்னுடைய வாடிக்கையாளர்களை, அவர்களுடைய வர்த்தகங்களில் இருக்கும் அபாயங்களில் இருந்து பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்திருக்கும் வோடஃபோன் ஐடியா லிமிடெட் தனது வர்த்தகப் பிரிவான வி பிசினஸ் மூலம் புதிய பாதுகாப்பு சேவையான வி க்ளவ்ட் ஃபயர்வால் அறிமுகப்படுத்தி உள்ளது.

க்ளவ்ட் தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்ட, இந்த புதிய சேவையின் மூலம், தனது பாதுகாப்பு தீர்வுகளுக்கான பட்டியலை மேலும் வலுப்படுத்தி உள்ளது வோடஃபோன் ஐடியா லிமிடெட். வாடிக்கையாளர்களின் நலனிற்காக கூட்டு செயல்பாடுகளை தொடர்ந்து வரும் வி பிசினஸ், நவீன வர்த்தக தேவைகளைப் பூர்த்தி செய்யும் தனது புதிய வி க்ளவ்ட் ஃபயர்வால் – ஐ பாதுகாப்பு தொழில்நுட்பத்தில் முன்னணி வகிக்கும் ஃபர்ஸ்ட்வேவ் க்ளவ்ட் டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அறிமுகப்படுத்தி இருக்கிறது. ஃபர்ஸ்ட்வேவ் க்ளவ்ட் டெக்னாலஜி நிறுவனம், வி-ன் ஒபன்ஸ்டேக் ரெட்ஹேட் க்ளவ்ட் இயங்குதளத்திற்காக ப்ரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, ஃபர்ஸ்ட்வேவ்-ன் க்ளவ்ட் கன்டெண்ட் செக்யூரிட்டி ப்ளாட்ஃபார்ம் மூலம் நிர்வகிக்கப்படும் வி க்ளவ்ட் ஃபயர்வால்களை வடிவமைக்க உதவியிருக்கிறது.

மிகவும் புதுமையான, பல நிறுவனங்கள் பயன்படுத்தும் வகையிலான ஒன்றாக வி க்ளவ்ட் ஃபயர்வால் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஃபயர்வால் தீர்வானது, இத்துறையில் முன்னணி வகிக்கும் பாலோ அல்டோ நெட்வொர்க்ஸ் விஎம் சிரீஸ் வர்ச்சுவல் நெக்ஸ்ட் ஜெனரேஷன் ஃபயர்வால் தொழில்நுட்பத்தினால் இயக்கப்படுகிறது.

வி க்ளவ்ட் ஃபயர்வால், கேட்வே ஆன்டி வைரஸ், டிடிஓஎஸ் பாதுகாப்பு, செக்யூர்ட் விபிஎன், டேட்டா லாஸ் ப்ரிவென்ஷன், கன்டெண்ட் ஃபில்டரிங், ரியல்டைம் இன்டலிஜென்ஸ் உள்ளிட்ட அடுத்த தலைமுறை ஃபயர்வால் அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், குறைந்த செலவில், பயன்படுத்துவதற்கு சௌகரியமான மற்றும் நெட்வொர்க் அடிப்படையிலான தீர்வுகளை கொண்டிருப்பதால் ஸீரோ கேபெக்ஸ், ஸீரோ டச் ஆகியவற்றை உறுதி செய்கிறது. இதனால் இதை நிறுவுவதற்கும், இயங்குவதற்கும் எந்தவொரு அடிப்படை உள்கட்டமைப்பும் தேவை இல்லை. உள்கட்டமைப்பு மேம்படுத்த வேண்டிய அவசியம் இல்லாமல், நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்பக் குழுக்களின் பங்களிப்பை சார்ந்து இல்லாமல், முழுமையாக நிர்வகிக்கப்படும் சேவைகளை பல்வேறு விதமான விருப்பத்தேர்வுகளுடன் ஒரே தளத்தில் தீர்வுகளை. வி க்ளவ்ட் ஃபயர்வால் துரிதமாக வழங்குகிறது.

இது தொடர்பாக வோடஃபோன் ஐடியா லிமிடெட் நிறுவனத்தின் தலைமை நிறுவன வணிக அதிகாரி அபிஜித் கிஷோர் கூறுகையில்,

வர்த்தக நிறுவனங்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பின்பற்றுவதை துரிதப்படுத்தவும், விரைவாக மாறும் சூழலுக்கு ஏற்ப பயன்படுவதற்கும், பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய மிகப்பெரும் தகவல் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு திறன்களையும் கட்டமைக்க தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. பெரிய மற்றும் சிறிய வணிக நிறுவனங்கள் மத்தியில் க்ளவ்ட் அப்ளிகேஷன்களுக்கு மாறுவது, அதிகரித்துவரும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. வி க்ளவ்ட் ஃபயர்வால் பயன்படுத்துவதற்கு மிகவும் சௌகரியமான, சந்தா அடிப்படையிலான நவீன தீர்வாகும்.

இது வணிக செயல்பாடுகள், இணையம் மூலமாக ஒருங்கிணைந்த தொடர்பு மற்றும் பல்வேறு பிரிவுகளிலான வணிகங்களுக்கான பாதுகாப்பு ஆகியவற்றை எளிதாக்குகிறது. வி க்ளவ்ட் ஃபயர்வால்-ஐ அறிமுகப்படுத்தியதன் மூலம், எங்கள் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த இணைய தொடர்பு மற்றும் பாதுகாப்பு தீர்வுகளை வழங்குவதில் வி பிசினஸ் மீண்டுமொரு குறிப்பிடத்தக்க முன்னேற்ற நடவடிக்கையை எடுத்துள்ளது. என்றார்.

இந்த கூட்டு செயல்பாடு குறித்து ஃபர்ஸ்ட்வேவ் க்ளவ்ட் டெக்னாலஜி தலைமை நிர்வாக அதிகாரி நீல் பொல்லாக் கூறுகையில்,

வி பிசினஸ் பாதுகாப்பான இணைய தீர்வுகளின் பட்டியலில் ஒருங்கிணைந்த ஒன்றாக, புதுமையான வி நெக்ஸ்ட் ஜெனரேஷன் க்ளவ்ட் ஃபயர்வால் -ஐ அறிமுகப்படுத்த வி பிசினஸ் உடன் இணைந்து செயலாற்றுவதில் ஃபர்ஸ்ட்வேவ் மகிழ்ச்சியடைகிறது. வி க்ளவ்ட் ஃபயர்வால் தனது வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட, புதுமையான இந்த தீர்வை வழங்கவேண்டுமென்பதற்காக வி க்ளவ்ட் ஃபயர்வால் மற்றும் ஃபர்ஸ்ட்வேவ் க்ளவ்ட் ஆகிய இரு நிறுவனங்களின் குழுக்களும் கடந்த பல மாதங்களாக ஒன்றிணைந்து பணியாற்றி உள்ளன.

மேலும் படிக்க