• Download mobile app
18 Aug 2025, MondayEdition - 3477
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வி தனது வி மூவிஸ் மற்றும் டிவி செயலியை வி ஆஃப் உடன் ஒருங்கிணைத்துள்ளது!

August 31, 2021 தண்டோரா குழு

இனி நீங்கள் உங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், வெப் சீரியல்கள் உள்ளிட்ட அசல் படைப்புகளை வி மொபைல் அப்ளிகேஷனிலேயே ஸ்ட்ரீம் செய்யலாம்.

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான வி, தனது புகழ்பெற்ற மொபைல் அப்ளிகேஷனான வி மூவிஸ் மற்றும் டிவி ஆஃப்-ஐ தனது வி ஆஃப் உடன் ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இந்த இரு மொபைல் அப்ளிகேஷன்களின் ஒருங்கிணைப்பின் மூலம் வி வாடிக்கையாளர்கள் இனி தங்களுக்கு மிகவும் பிடித்த திரைப்படங்கள், வெப் சீரியல்கள் மற்றும் அசல் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை தங்கு தடையின்றி ஸ்ட்ரீம் செய்து கண்டுகளிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

மிகவும் எளிமைப்படுத்தப்பட்ட மற்றும் புதிய பயன்பாட்டு அனுபவத்தை வழங்கும், வி ஆஃப் தற்போது ழுவுவு செயலியாக இரு மடங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வழங்கி வரும் பல்வேறு தயாரிப்புகள் மற்றும் சேவைகளுடன் கூடுதலாக அசல் பொழுதுபோக்கு படைப்புகளையும் வழங்கும் ஒரு மாபெரும் தளமாக வி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும்.

ஏi சந்தாதாரர்கள் இனி வி ஆஃப்-ல் அட்டகாசமான அசல் படைப்புகளைக் கண்டுகளிக்கலாம்:

ஜீ டிவி, ஜீ சினிமா, கலர்ஸ் ஹெச்டி, கலர்ஸ் இன்ஃபினிட்டி, டிஸ்கவரி, எம்டிவி, ஹிஸ்டரி டிவி, சன் டிவி, ஜீ பங்களா, அனிமல் ப்ளானட், நிக் உள்ளிட்ட 450 பிளஸ் நேரடி டிவி சேனல்கள் இதில் அடங்கும்.

ஆஜ் தக், இந்தியா டிவி, சிஎன்பிசி ஆவாஸ், ரிபப்ளிக் டிவி, ஏபிபி நியூஸ், என்டிடிவி 24ஃ7, சிஎன்என் நியூஸ் உள்ளிட்ட நேரடி செய்திகள் சேனல்களும் இதில் அடங்கும்.

வூட் செலக்ட், டிஸ்கவரி, லயன்ஸ் கேட் ப்ளே, சன்நெக்ஸ்ட் மற்றும் ஷெமரூ மீ போன்ற ழுவுவு அப்ளிகேஷன்களில் இருந்து ப்ரீமியம் அசல் படைப்புகளை, நிகழ்ச்சிகளைக் கண்டுக்களிக்க முடியும்.

இந்த மேம்பட்ட மற்றும் ஒருங்கிணைந்த அனுபவம் தற்போது ஆண்ட்ராய்ட் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு லைவ்வாக கிடைக்கிறது.மேலும் மிக விரைவிலேயே ஐஒஎஸ் இயங்குதளத்தைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். வாடிக்கையாளர்கள் இந்த அப்ளிகேஷனை இந்த இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்யலாம்.

மேலும் படிக்க