• Download mobile app
30 Mar 2026, MondayEdition - 3701
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஸ்வாஸ் கோவை சங்கமம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி

November 20, 2021 தண்டோரா குழு

விஸ்வாஸ் கோவை சங்கமம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூட்டு பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற்றது.

கோவை பீளமேடு பகுதியில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள் கோவிலில் விஸ்வாஸ் கோவை சங்கமம் சார்பில் விஷ்ணு சகஸ்ரநாமம் கூட்டு பிராத்தனை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், விஸ்வாஸ் நிறுவன தலைவர் டி.ஜே ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

கோயம்புத்தூர் சின்மய மிஷன் பிரம்மச்சாரிய விக்னேஷ் சைதன்யா, பேச்சாளர் அரவிந்த் சுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக ஹர்ஷ வித்யா, ஸ்வாமினி அட்மபிரகஷநந்த சரஸ்வதி அவர்கள் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காலத்தில் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். இனி வரும் காலங்களில் அவர்களின் வாழ்வில் நலமும் கஷ்டங்கள் நீங்கியும் உலக அமைதிக்காக விஸ்வாஸ் கோவை சங்கமம் சார்பில் இந்த கூட்டுப்பிரார்த்தனை நடைபெறுவது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து விஸ்வாஸ் கோவை சங்கம் சார்பில் பெருமாளுக்கு சிறப்பு பூஜை நடைபெற்று விஷ்ணு சகஸ்ரநாமம் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி பக்தர்கள் முன்னிலையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விஸ்வாஸ் மூத்த இயக்குனர் ராமபத்ரன், இயக்குனர் டி .எஸ் சிவராமகிருஷ்ணன்,உட்பட நிர்வாகிகள் பக்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க