• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விவசாய சங்கத்தினர் மனு

June 24, 2019 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத்தினர் மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனு ஒன்று அளித்தனர்.அதில் ஆனைமலை வட்டம் ஓடையகுளம் பகுதியில் விவசாய பாசனதிற்கு உடனடியாக தண்ணீர் திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவ்வமைப்பின் கோவை மாவட்ட தலைவர் பட்டீஸ்வரன்,

ஓடையகுளம் பகுதியில் 1000 ஏக்கர் நிலம் உள்ளதாகவும் இங்கு தென்னை,வாழை, கரும்பு என விவசாயிகள் பயிரிட்டு வருவதாக தெரிவித்தார். வழக்கமாக விவசாயதிற்கு மே 15 முதல் ஏப்ரல் 15 வரை பதினோரு மாதங்களுக்கு ஒரு போக விவசாயம் செய்ய ஒரு டி.எம்.சி தண்ணீர் திறந்து விட வேண்டும். வருடதிற்கு இரண்டு போக விவசாயம் செய்து வரும் நிலையில் கடந்த ஆறு மாதங்களாக தண்ணீர் திறக்கபடவில்லை என்றார்.

மேலும், தண்ணீர் திறக்காத காரணத்தால் ஒரு போக விவசாயம் செய்யவில்லை.ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனை நம்பி கூலி வேலை செய்யும் பத்தாயிரம் பேர் பாதிக்கபட்டு உள்ளதாகவும் கூறினார்.இதனால் விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் விவசாய பாசனதிற்கு தண்ணீர் திறந்து விட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் படிக்க