September 27, 2020
தண்டோரா குழு
விவசாய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து எஸ்.டி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
மத்திய அரசு சமீபத்தில் மூன்று வேளான் சட்டத்தை இயற்றியது.இந்த சட்டதிற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு எஸ்.இ.பி.ஐ சார்பில் கணடன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அப்போது வேளான் சட்டதிற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.வர்த்தக அணி மாநில செயலாளர் அப்துல் கரீம்,மாவட்ட தொழிற்சங்க தலைவர் ரபூப் நிஸ்தார் உள்ளிட்டோர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.மத்திய அரசின் இந்த சட்டம் இந்த சட்ட மசோதா நிலைகுழுவிற்கோ தேர்வு குழுவிற்கோ அனுப்பி ஆராயாமல் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றபட்டு உள்ளது.குறைந்தபட்ச ஆதாய விலை எதுவும் குறிப்பிடபடவில்லை.
இதனால் இந்த சட்டத்தில் விவசாயிகளுக்கு நம்பிக்கை இல்லை எனவும் தெரிவித்தனர்.