• Download mobile app
15 Sep 2025, MondayEdition - 3505
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி கையில் வேலுடன் மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் மனு

January 21, 2019 தண்டோரா குழு

விவசாய கடன்களை தள்ளுபடி செய்வது மற்றும் விவசாய மேம்பாட்டிற்கான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கையில் வேலுடன் வந்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

விவசாயத்தை மேம்படுத்தும் வகையில் விவசாயிகள் பெற்ற கடன்களை ரத்து செய்யக்கோரியும், பாராளுமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் விவசாயத்திற்கென தனி பட்ஜெட்டை மத்திய அரசு நிறைவேற்றகோரியும் தமிழக விவசாயிகள் சங்கத்தின் விவசாயிகள் தைப்பூசத்தை ஒட்டி, கையில் வேலுடன் வந்து மாவட்ட
ஆட்சியர் ஹரிஹரன் அவர்களிடம் மனு அளித்தனர்.

தமிழ்நாட்டில் கோவை மாவட்டத்தில் அதிக பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. நீர் தட்டுப்பாடு, தட்பவெப்ப நிலை போன்ற பல்வேறு சவால்களை சந்திக்கும் விவசாயிகள், வாங்கிய வங்கி கடன்களையும் திரும்ப செலுத்த முடியாமல் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே, விவசாயத்தை ஊக்குவிக்க தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் பாரபட்சம் இல்லாமல் தள்ளுபடி செய்யப்பட வேண்டும். மேலும், பிப்ரவரி மாதத்தில் கூடும் பாராளமன்ற, நாடாளுமன்ற கூட்டத் தொடரில் விவசாயத்திற்காக தனி பட்ஜெட் தீர்மானிக்கப்பட வேண்டும், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் வழங்கவும், விவசாயிகள் விளைவிக்கும் பெருட்களுக்கு உரிய விலை நிர்ணயம் செய்யவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்’ என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க