• Download mobile app
01 Sep 2025, MondayEdition - 3491
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விவசாயிகளுக்காக தனி வங்கி கணக்கு துவங்கி மக்களிடம் நிதிபெறவேண்டும் – ஆறுகுட்டி எம்.எல் ஏ

April 22, 2017 தண்டோரா குழு

தமிழக விவசாயிகளின் விவசாய கடன் பிரச்சினைகளை தீர்க்க பொது மக்களிடம் நிதி திரட்டி விவசாயிகளின் கடனை அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கவுண்டம்பாளையம் சட்ட மன்ற உறுப்பினர் ஆறுகுட்டி வலியுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வறட்சி,குடிநீர் பிரச்சினை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி , ஆலோசனை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது டெல்லியில் தமிழக விவசாயிகள் தினம் ஒரு போராட்டம் நடத்தி வருவது வேதனை அளிப்பதாகவும், விவசாயிகளின் போராட்டத்தை பார்க்கும் போது சாப்பிட கூட முடியவில்லை எனவும் வருத்தம் தெரிவித்தார்.

மேலும் விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்க்க பொது மக்களிடம் நிதி திரட்டி விவசாயிகளின் கடனை அடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இன்று நடைபெற்ற கூட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் தனது சொந்த நிதியை விவசாயிகளுக்காக வழங்குவதாக மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்து இருப்பதாகவும், ஏராளமானோர் விவசாயிகளுக்காக நிதி அளிக்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

ஜல்லிகட்டுக்காக ஓன்று கூடிய மக்கள் விவசாயிகளுக்காக ஓன்று சேர்வார்கள் என சுட்டிக்காட்டியதுடன் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தகூடாது எனவும் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோல் விவசாயிகளுக்காக அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்துவதால் பலனில்லை எனவும் தனியாக வங்கி கணக்கு துவங்கி மக்களிடம் நிதி பெற்று விவசாயிகளின் கடன் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். ஓ.பன்னீர் செல்வம் அணி எடப்பாடி அணி இணைப்பு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க