• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விளை நிலங்களில் அடுக்கு மாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாய காப்போம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

March 1, 2019 தண்டோரா குழு

விளை நிலங்களில் அடுக்கு மாடி கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவையில் விவசாய காப்போம் அமைப்பினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விவசாய நிலங்களை அழித்து அடுக்கு மாடி குடிருப்புகளை பல்வேறு தனியார் கட்டுமான நிறுவனங்கள் கோவையின் சுற்றுப்புற பகுதகளில் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இதனால் விவசாயம் மற்றும் விளை நிலங்கள் பாதிப்படைவதோடு விவசாயிகளும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், விவசாய நிலங்களில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயம் காப்போம் என்ற அமைப்பினர் கோவையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாய நிலங்களை குறைந்த விலைக்கு வாங்கி,பின்னர் விவசாயம் செய்யாமல் நிலத்தை வறண்ட பூமியாக காட்டி அரசாங்கத்திடம் அனுமதி பெறுவதை எதிர்த்தும்,விதிகளை மீறி ஆழ் துளை கிணறுகள் போடுவதை எதிர்த்தும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கண்டன கோசங்கள் எழுப்பினர்.

பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய அவ்வமைப்பின் தலைவர் ஞானசுந்தரம்,

வனங்களை பாதுகாத்து சுற்றுப்புறங்களை பாதுகாக்கவும், நீர் நிலைகளை பாதுகாத்து அவற்றை முறையாக விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தும் முறைகளை விவசாயிகளுக்கு இந்த அமைப்பின் வாயிலாக பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்து வருவதாக குறிப்பிட்டார். விவசாய நிலங்களை அழித்து இது போன்ற அடுக்குமாடி குடியிருப்புகள் கட டுவதால் எதிர்காலத்தில் விவசாயகளின் நிலை கேள்விக்குறியாகிவிடும் என தெரிவித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட விவசாயகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க