• Download mobile app
05 Sep 2025, FridayEdition - 3495
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் ஐ.ஆர்.சி.டி.சியின் “Buy Now Pay Later”

May 31, 2017 தண்டோரா குழு

ஐ.ஆர்.சி.டி.சி சேவையைப் பயன்படுத்தி ரயில் டிக்கெட் வாங்குவோர் உடனே பணம் செலுத்தாமல், அந்த தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தும் புதிய வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

மும்பையை சேர்ந்த பின்டெக் நிறுவனம் ஐ.ஆர்.சி.டி.சி நிறுவனத்துடன் சேர்ந்து ” Buy Now Pay Later சேவையை அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் ரயில் டிக்கெட் வாங்குவோர் உடனே பணம் செலுத்தாமல், அந்த தொகையை 14 நாட்களுக்குள் செலுத்தலாம்.

இது குறித்து ஈபே லேட்டர் நிறுவனத்தின் நிறுவனர் ஆக்ஷத் சக்ஸ்சேனா கூறுகையில்,

“இந்த சேவையை செயல்படுத்த, ஒருமுறை மட்டும் பதிவு செய்ய வேண்டும். வாடிக்கையாளர்கள் தங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை சமர்ப்பித்து, ஒன் டைம் பாஸ்வோர்ட் பெறலாம்.

வாடிக்கையாளர்கள் இதுவரை மேற்கொண்டுள்ள பரிமாற்றங்கள், சமூக வலைத்தளம் ஆகியவற்றை உறுதி செய்த பிறகு வழங்கப்படும். தனிநபர் வங்கியில் கடன்போன்றது இந்த சேவை. குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் பணம் செலுத்த தவறினால், அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க