• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விரைவில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் பெண் மனு

November 20, 2017 தண்டோரா குழு

கோவை சோமனூர் பேருந்து நிலையம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த அரசு பேருந்து நடத்துநரின் மனைவி,விரைவில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை மாவட்டம் கருமத்தப்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட சோமனூர் பகுதியில் உள்ள பேருந்து நிலையத்தின் மேற்கூறை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.இந்த விபத்தில் உயிரிழந்த மதுரை மாவட்டத்தை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் சிவக்குமாரின் குடும்பத்திற்கு இழப்பீடும், அரசு பணியும் வழங்கப்படும் என அரசு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து சிவக்குமார் குடும்பத்திற்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகை வழங்கப்பட்டது.ஆனால் அவருக்கு வழங்குவதாக கூறிய அரசு பணி இன்னும் வழங்கப்படாமல் உள்ளதால், தங்கள் குடும்பம் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், உடனடியாக மதுரையில் அரசு பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிவக்குமாரின் மனைவி சவுந்தர்யா தனது கைக்குழந்தையுடன் மனு அளித்தார்.

மேலும் படிக்க