• Download mobile app
02 Mar 2026, MondayEdition - 3673
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான நிறுவன அதிகாரி முகத்தில் கேக் பூசிய பார்வையாளர்

May 10, 2017 தண்டோரா குழு

ஆஸ்திரேலியாவை சார்ந்த கோண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி பேசிக்கொண்டிருக்கும் போது அவரது முகத்தில் மற்றொருவர் கேக் உணவை பூசிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கோண்டஸ் விமான நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஆலன் ஜாய்ஸ் கூட்டம் ஒன்றில் ‘லண்டன் நகரிலிருந்து பெர்த் நகருக்கு இடையே நேடியாக பயணம் செய்யும் விமானம் ஒன்றை தொடங்குவதை’ குறித்து பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது, பார்வையாளர் ஒருவர் திடீரென எழுந்து மேடைக்கு வந்து அவருடைய முகத்தில் ‘பை’ என்ற கேக் உணவை பூசினார். இதனால் ஜாய்ஸ் அதிர்ச்சியடைந்தார்.

அதன் பின் அவர் உடனே அங்கிருந்து எந்த ஒரு சலனமும் இல்லாமல் சென்று தனது முகத்தை சுத்தம் செய்துவிட்டு, மீண்டும் கூட்டத்திற்கு வந்தார். இதனால் அவரை மக்கள் கைத்தட்டி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். “இவ்வாறு நடந்ததற்கு என்ன காரணம் என்று எனக்கு தெரியவில்லை” என்றார் அவர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஒருவர் கூறுகையில்,

“இப்படிப்பட்ட ஒரு சம்பவம் நடக்க என்ன காரணம் என்று தெளிவாக தெரியவில்லை” என்றார்.

“இந்த சம்பவத்திற்கு காரணமான அந்த நபரை கைது செய்துள்ளோம். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று பேர்த் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், இப்படிப்பட்ட சம்பவம் நடந்து முதல்முறை அல்ல. நியூஸ் கார்ப் நிர்வாக தலைவர், ரூபர்ட் முர்டோக், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ், மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜெர்மி கிளார்க்சன் ஆகியோருக்கும் இது போன்ற சம்பவம் நடத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க