• Download mobile app
02 Aug 2026, SundayEdition - 3826
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமான டிக்கெட் வாங்காமல் பயணம் செய்த குழந்தை!

July 20, 2017 தண்டோரா குழு

சீனாவில் நான்கு வயது மகளுக்கு விமான பயண சீட்டு வாங்காமல் பயணம் செய்ய முயன்றது கண்டுபிடிக்கபட்டதால், விமானம் தாமதமாக கிளம்பி சென்றது.

சீனா நாட்டின் விமான நிலையத்தில் இருந்து பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய் செல்ல ஜூன்யோ ஏர்லைன்ஸ் விமானம் புறப்படும் நிலையில் இருந்தது. அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த தம்பதியினர், தங்கள் நான்கு வயது மகளுக்கு விமான பயண சீட்டு வாங்கவில்லை. பயண சீட்டு இல்லாமல் அவளை விமானத்தில் அழைத்து வந்தனர்.

இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு கண்டிப்பாக விமான பயண சீட்டு வாங்க வேண்டும். ஆனால், நான்கு வயது சிறுமிக்கு பயண சீட்டு இல்லாததை கண்ட அந்த விமான ஊழியர்கள், உடனே விமானநிலைய அதிகாரிகளுக்கு தகவல் தந்துள்ளனர். இதையடுத்து, அந்த விமானத்தில் இருந்து அனைத்து பயணிகளும் மீண்டும் ஒருமுறை விமான பாதுகாப்பு முறையை செய்ய அனுமதித்தனர்.

அப்போது அந்த தம்பதியினரை விசாரித்தபோது, மகள் 12௦ சென்டிமீட்டருக்கு குறைவாக இருந்துள்ளதால், அவளுக்கு விமான பயண சீட்டு தேவையில்லை என்று எண்ணி, அவளுக்கு பயண சீட்டு வாங்கவில்லை என்று தெரிவித்துள்ளனர். இதனால், அந்த விமானம் சுமார் 9௦ நிமிடங்கள் தாமதமாக புறப்பட்டுள்ளது.

மேலும், இதற்கு காரணமான அந்த தம்பதியினருக்கு தண்டனை எதுவும் வழங்கவில்லை என்று விமான தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் படிக்க