• Download mobile app
05 Nov 2025, WednesdayEdition - 3556
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த பெண்

October 27, 2017 தண்டோரா குழு

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் லண்டனில் இருந்து கிரீஸ் நாட்டிற்கு விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்துள்ளார்.

கரோன் கிரீவ்(57)என்ற எழுத்தாளர் தனது விடுமுறை நாட்களை கிரேஸ் நாட்டின் கிரேட் தீவில் செலவு செய்ய விரும்பினர்.இதனையடுத்து 4ஜெட்2 விமானத்தில் பயணம் செய்ய முடிவு செய்து, அதற்காக 46 பவுண்டு பணம் செலுத்தி, பயண சீட்டு வாங்கினார்.

இந்நிலையில் பயணம் செய்யும் நாளன்று கிளாஸ்கோ விமானநிலையத்திற்கு வந்தார். அப்போது, அவர் பயணம் செய்யும் விமானத்தில், அவரோடு 3 பேர் மட்டுமே பயணம் செய்கின்றனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், எதிர்பாராதவிதமாக, அவரோடு கூட பயணம் செய்ய இருந்தவர்கள் வரவில்லை. அதனால், தனி ஒருவராக பயணம் செய்தார்.

இந்த பயணம் குறித்து கரோன் கூறுகையில்,”பயணத்தின் போது,விமானி எந்த நாடுகளின் பறந்து கொண்டிருகிறது என்பதை சுட்டிக்காட்டினார்.மேலும்,விமானத்தின் முதல் இருக்கையில் என்னை அமர செய்து, என்னுடைய தேவைகளை அறிந்து, அதன்படி விமான ஊழியர்கள் நடந்துக்கொண்டனர்.இது ஒரு அற்புதமான பயணமாக எனக்கு இருந்தது” என்று கரோன் தெரிவித்தார்.

மேலும் படிக்க