• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விநாயகர் சிலை ஊர்வலத்தை முன்னிட்டு போக்குவரத்து மாற்றம்

September 3, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரில் வருகிற 04.09.2022 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவிருப்பதால் காலை 11.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை கீழ்கண்டாவறு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

1. உக்கடம் பேருந்து நிலையத்திலிருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு -செல்வபுரம் -சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும் .

2. காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி , சலிவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று வலது புறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு – சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

3.உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

4. உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி – ராஜ வீதி – இரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

5.தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி N.S.R ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு – ARC சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும் .

6.மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கணபதி -காந்திபுரம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும் .

7.மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் விநாயகர் சிலை ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் தியேட்டரை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.

8.பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகள் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு , செல்வபுரம் மேல் நிலைப் பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழி சாலை வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு 04. 09. 2022 அன்று காலை 08.00 மணி முதல் இரவு 08.00 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடைவிதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க