July 30, 2020
தண்டோரா குழு
விநாயகர் சதுர்த்தி விழாவை நடத்த அனுமதி கோரியும், புதிய இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதி வழங்குமாறும் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் 22 ஆம் தேதி இந்துக்களின் புனித பண்டிகையாக விநாயக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதே போல இந்த வருடமும் சிறப்பான முறையில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி வழங்குமாறும் மேலும் புதிய இடங்களில் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதிக்குமாறும் சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பில் மாவட்டத் தலைவர் காளிதாஸ் முன்னிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சக்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தின் மாவட்ட செயலாளர் காவி முத்து ராஜ்,
கொரானா காலத்தை கருதி பல்வேறு பண்டிகைகள் ரத்து செய்யப்பட்டிருப்பதாக கூறினார். மேலும் இந்த வருடம் வரவிருக்கும் விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். இந் நிகழ்வில் கோவை மாவட்ட செயலாளர் முத்துராஜ், மாநில நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், வினோத், ராஜா கார்த்திக், சரவணன், மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.