• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்ற பிரசுரத்தை விநியோகித்த பாதிரியார் கைது

September 2, 2021 தண்டோரா குழு

விநாயகர் சதுர்த்தியன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும் என்ற பிரசுரத்தை விநியோகித்த பாதிரியார் கைது

கோவை தடாகம் சாலையில் உள்ள செயிண்ட் பால் பள்ளி, மற்றும் கலை அறிவியல் கல்லூரியை நடத்தி வருபவரான டேவிட் “விநாயகர் சதுர்த்தி அன்று ஜெபயாத்திரை நடத்த வேண்டும்” என்பது போன்ற பிரசுரங்களை விநியோகம் செய்ததாக கூறப்படுகிறது. அந்த பிரசுரம் பள்ளி நிர்வாக லெட்டர் பேடில் அச்சிடப்பட்டிருந்த நிலையில் இது மத கலவரத்தை தூண்டுவது போன்றுள்ளது என தெரிவித்த இந்து முன்னனி அமைப்பினர் நேற்று துடியலூர் காவல் நிலையத்தில் டேவிட்டை கைது செய்ய வேண்டும் என புகார் அளித்திருந்தனர்.

இப்புகாரின் அடிப்படையில் செயிண்ட் பால் கல்வி நிறுவன சேர்மேனான டேவிட்டை துடியலூர் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இதையடுத்து, கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டேவிட்டுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் படிக்க