• Download mobile app
24 Sep 2026, ThursdayEdition - 3879
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி மீது புகார்

February 12, 2021 தண்டோரா குழு

விஜய் மக்கள் இயக்கத்தின் முன்னாள் நிர்வாகி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய் மக்கள் இயக்கத்தினர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.

தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நீக்கப்பட்ட ஜெயசீலன் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சியில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் மீது அடிப்படையாக ஆதாரங்கள் இல்லாமல் அவதூறாக பேசி வருவதாகவும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கோவை மாவட்ட தலைவர் பிரதீப் குமார்,

ஜெயசீலன் எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லாமல் தனியார் தொலைக்காட்சியில் அவதூறு பேசி வருவதாகவும் மாவட்ட நிர்வாகிகள் குறித்தும் பேசுவதாகவும் அவர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க