• Download mobile app
06 May 2024, MondayEdition - 3008
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

விஜயன் கொலை வழக்கு இருவர் விடுதலை

April 24, 2017 தண்டோரா குழு

எம்.ஜி.ஆரின் உ றவினர் விஜயன் கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பேரை வழக்கில் இருந்து விடுவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எம்.ஜி.ஆரின் வளர்ப்பு மகள் சுதாவின் கணவர் விஜயன் என்ற எம்.ஜி.ஆர். விஜயன். கடந்த 2008ம் ஆண்டு ஜூன் மாதம் கோட்டூர்புரத்தில் மர்ம நபர்களால் இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கை அபிராமபுரம் போலீசார் விசாரித்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. சிபிசிஐடி காவல் துறையினர் நடத்திய விசாரணையில் கொலையான விஜயனின் மனைவி சுதாவின் தங்கையான பானு என்பவர் சொத்து விவகாரம் காரணமாக கூலிப்படை மூலம் விஜயனை கொலை செய்தது கண்டிபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பானு, காவலர் கருணா,சுரேஷ், ஆர்.கார்த்தி,எம்.கார்த்தி,தினேஷ்,சாலமன் உள்ளிட்ட ஏழு பேரை சிபிசிஐடி போலிசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட முதன்மை செசன்சு நீதிமன்றம் அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீட்டில் திங்கட்கிழமை காலை தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கிலிருந்து பானுமதி மற்றும் எம்.கார்த்திக் ஆகியோரை விடுவித்து உத்தரவிட்டுள்ளது. மற்ற ஐவருக்கும் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

மேலும் படிக்க