• Download mobile app
30 Aug 2025, SaturdayEdition - 3489
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

விக்ரமின் “ஸ்பிரிட் ஆப் சென்னை”.

April 25, 2016 தண்டோரா குழு

சென்னை வெள்ளம்- தமிழக மக்களை மட்டுமல்லாது ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சோகத்தில் மிதக்க வைத்தது. அந்த நாட்களில் தான் ஏழைப் பணக்காரர் யார் என்று தெரியாத அளவிற்கு மக்கள் அவதிக்குள்ளானார்கள்.

உடுக்க உடை, உண்ண உணவு போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் உயிருக்குப் போராடினர். அந்த நாட்களை யாராலும் மறக்கமுடியாது.

ஆனால் மனிதநேயம் அனைவரிடமும் இருக்கிறது என்பது அன்று தான் வெளிப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாது வெளிமாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தங்களால் முடிந்த உதவிகளை அவர்களே முன்வந்து செய்தனர்.

இதுபோன்ற இயற்கை சீற்றம் வரும்போது மக்களிடம் வெளிப்பட்ட ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையிலும் மற்றும் இது போல என்றும் ஒருவருக்கொருவர் மனிதநேயத்தை வெளிப்படுத்த வேண்டும் என்ற காரணத்திற்காகவும், நடிகர் விக்ரம் இயக்கிய ஸ்பிரிட் ஆப் சென்னை என்னும் இசை ஆல்பம் ஒன்றை இன்று இரவு 7:00 மணிக்குச் சோனி மியூசிக் இந்தியா தனது சேனலில் ஒளிபரப்ப உள்ளது.

இந்த மியூசிக் ஆல்பத்தில் இந்திய சினிமா நட்சதிரங்கள்ளான சூர்யா, பிரபுதேவா, அபிஷேக் பச்சன், கார்த்தி, நிவின் பால், பிரித்விராஜ், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, ஜீவா, நயன்தாரா, நித்யா மேனன், வர லக்ஷ்மி, அமலா பால், சார்மி, மும்தாஜ், போன்றவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

நடிகர் விக்ரம் இயக்கிய இந்த இந்த மியூசிக் ஆல்பத்திற்கு கிரிநாத் இசையமைத்துள்ளார். மொத்தம் 29 முன்னணி பாடகர்கள் பாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மதன் கார்க்கி, கானா பாலா மற்றும் டங்காமாரி பாடல் புகழ் ரோகேஷ் படலாசிரியர்களாக பணிபுரிந்துள்ளனர். விஜய் மில்டன் மற்றும் ஓம் பிரகாஷ் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் படிக்க