August 28, 2020
தண்டோரா குழு
வாழ்வாதாரத்தை பாதுக்காக்க வலியுறுத்தி கோவையில் மாதர் சம்மேளனத்தினர் ( NFIW ) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும், உணவு பாதுகாப்பை உறுதி செய்யவேண்டும்,கல்லூரி வரை ஆனைவருக்கும் இலவச கல்வி கிடைக்க ஆரசு உறுதியளிக்கவேண்டும்.வேலை வாய்ப்பை உருவாக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ( NFIW ) நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதன் ஒருபகுதியாக கோவை ஜீவா இல்லத்தின் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட தலைவர் எம். நிர்மலா தலைமை தாங்கினார். மாவாட்ட செயலாளர் கே.சுமதி முன்னிலை வகித்தார்.