• Download mobile app
22 May 2025, ThursdayEdition - 3389
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வாழும் கலை அமைப்பின் சார்பில் மாபெரும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி !

July 22, 2020 தண்டோரா குழு

வாழும் கலை அமைப்பின் சார்பில் வீரம் வலிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக 1 முதல் 2 கோடி மக்கள் பங்கேற்கும் கந்தசஷ்டி கவசம் பாராயணம் நிகழ்ச்சி இணையத்தளம் மூலம் நடைபெற இருக்கிறது.

வாழும் கலை அமைப்பின் சார்பில்
வருகின்ற 26ந்தேதி வீரம் வலிமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்காக ஒன்று முதல் இரண்டு கோடி மக்கள் பங்கேற்கும் கந்த சஷ்டி கவச பாராயண நிகழ்ச்சி இனையதளம் மூலம் நடைபெறுகின்றது.

இதுகுறித்து வாழும் கலை அமைப்பின் அறங்காவலர் மோகனசுந்தரி ஜெகநாதன், ஒருங்கிணைப்பாளர் தாமோதரன் மற்றும் சசிரேகா ஆகியோர் கூறும்போது,

உலக ஆன்மீக தலைவர் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கருடன் உலகெங்கிலுமிருந்து 1 முதல் 2 கோடி தமிழர்கள் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்ய இருக்கின்றனர். இந்த கந்த சஷ்டி கவசம் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை மேலும் மனித நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்தவும் பதட்டத்தை குறைக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. ஒவ்வொரு தமிழ் குடும்பத்தின் ஒரு பகுதியாக தினசரி பிரார்த்தனைகளில் பக்தியுடன் கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யப்படுகிறது.

மேலும் அது வீரம் மற்றும் மன வலிமையை அழித்து மக்களை பாதுகாக்கும் கவசம் என்று நம்பப்படுகிறது. உடலின் வெவ்வேறு பகுதிகளில் தியானம் மூலம் கவனம் செலுத்துவது உடலை உயிர்ப்பிக்கிறது மற்றும் குணப்படுத்துகிறது. இதில் சிங்கப்பூர், இலங்கை ,மலேசியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் உலகின் தமிழ் மொழி பேசும் மக்கள் கொண்ட பிற நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்கள் இந்த கந்த சஷ்டி தினத்தில் பங்கேற்க இருக்கின்றனர்.

குருதேவ் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் முன்னிலையில் நடக்க இருக்கும் இந்த நிகழ்ச்சி சமூக ஊடக வழியாக நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும், இது மிகப் பிரம்மாண்டமான பிரார்த்தனை கூட்டமாக நிகழவிருக்கிறது என்று கூறினார்கள்.

மேலும் படிக்க