May 6, 2020
தண்டோரா குழு
வாளையாறு சோதனை சாவடியில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனம் கடும் சோதனைக்கு பின் அனுமதி,நீண்ட தொலைவிற்கு வாகனங்கள் நிற்பதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தமிழக – கேரளா எல்லைகளில் உள்ள 13 சோதனை சாவடிகள் கடந்த 35 நாட்களாக முழுமையாக மூடப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து எடுத்துச் செல்லும் வாகனம் தவிர பிற வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்நிலையில் மே 4 க்கு பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி இ – பாஸ் எடுக்கும் பொது மக்கள் சோதனைக்கு பின் உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வாளையாறு எல்லையில் கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் கடுமையான சோதனைகள் நடத்தப்படுவதால் சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவிற்கு வாகனங்கள் வரிசையாக நிற்கிறது. இதனால் நீண்ட நேரம் பொதுமக்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. கூட்டமாக இருப்பதை தவிர்க்க வலியுறுத்தும் நிலையில் விரைவாக வாகனங்களை சோதனை செய்து அனுப்ப வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.