October 4, 2017
தண்டோரா குழு
கோவை மாவட்டம் வால்பாறை சங்கிலி ரோடு பகுதியில் தொடரும் காட்டு யானை தாக்குதலால் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை சங்கிலி ரோடு பகுதியில் அடிக்கடி காட்டு யானை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்நிலையில்,தற்போது காட்டுயானை சங்கிலி ரோடு பிரிவில் உள்ள பள்ளிக்கூட சுற்றுச்சுவற்றை இடித்து சேதபடுத்தியது. பின்பு அருகில் உள்ள ரேசன் கடையை சேதப்படுத்தியது.
பொதுமக்கள் விரட்டியதால் அங்கிருந்து நல்லமுடி 2வது டிவிசனுக்கு சென்று அங்குள்ள விநாயகர் கோவில் கதவை உடைத்தது பின்பு அருகில் உள்ள டீக்கடையை சேதப்படுத்தியது. இதைதொடர்ந்து அங்கிருந்து நல்லமுடி 3வது டிவிசனுக்கு சென்ற யானை அங்கு ஆதிமுருகன் என்பவரது வீட்டை சேதப்படுத்தியது.எனினும் அருகில் வனத்துறை அலுவலகம் இருந்தும் வனஊழியர்கள் ஒருவரும் யாணையை விரட்ட வரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.மேலும் தொடர்ந்து யானை நடமாட்டம் உள்ளதால் நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டுள்ளது.