• Download mobile app
20 Jun 2026, SaturdayEdition - 3783
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாலாங்குளத்தில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களை அகற்றிய கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு

May 21, 2018 தண்டோரா குழு

வாலாங்குளத்தில் 2 டன் பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களை கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு அகற்றியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள குளங்களில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு ஒவ்வொரு வாரமும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுதல், மதுபாட்டில்களை அகற்றுதல் போன்ற களப்பணி செய்து வருகிறது.அந்த வகையில்,கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் 67 வது வார தொடர் களப்பணி நேற்று கோவை மாவட்டம் உக்கடம் அருகில் இருக்கும் வாலாங்குளத்தில் நடைபெற்றது.

இந்த களப்பணியில் 50க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கலந்து கொண்டு 2டன் அளவுள்ள பிளாஸ்டிக் கழிவுகளையும், மதுபாட்டில்களையும் அகற்றினர். மேலும் இந்த குளத்தை அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் திறந்த வெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதும், சாலையோரத்தில் விற்கப்படும் இளநீர் கடையினரால் தூக்கியெறியப்படும் ஸ்ட்ராக்களும் இந்த குளத்திற்கு சவாலாக உள்ளது என்றும் இந்த நிலைமை மாறும் வரை எங்களது தொடர் களப்பணி தொடரும் என்றும் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க