• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வானதி ஸ்ரீனிவாசனின் விமர்சனத்திற்கு பதிலடி கொடுத்த கமல்ஹாசன் !

March 31, 2021 தண்டோரா குழு

கருத்துக்கணிப்புகள் என்ற பெயரில் கருத்து திணிப்புகள் நடைபெறுகிறது என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் சிங்காநல்லூர் தொகுதிக்கான மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டார்.

அதில் மக்கள் குறைகள், கருத்துக்களை எம்எல்ஏ உடன் நேரடியாக பகிர்ந்து கொள்ள சிறப்பு செயலி உருவாக்கப்படும், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் பூங்கா, சிங்காநல்லூரில் அரசு மருத்துவமனை அமைக்கப்படும் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கமல்ஹாசன்,

1947க்கு முன்னதாக இருந்த அரசியல் நாடு சம்மந்தப்பட்டது. தற்போது உள்ள அரசியல் நரி தந்திரம், அரசியல் தொழில் அல்ல தன் கடமையாக மாறி உள்ளதாகவும், தன்னுடைய தேர்தல் யுக்தி என்பது தன்னுடைய நேர்மை எனவும், எனது தனித்திறமையை காட்ட வாய்ப்பை கேட்டு வந்துள்ளேன் என்றார்.

கோவை பாஜக ஊர்வலகத்தில் மோதல் ஏற்பட்டது குறித்த கேள்விக்கு, இதற்கு பதில் சொல்வது தனது தரத்தை குறைத்துவிடும் என்றும், அதற்கு மக்கள் தீர்ப்பு வழங்குவார்கள் என்றவர், துக்காடா துக்காடாவாக இருந்த ராஜ்ஜியங்கள் இணைந்து இந்தியா உருவாகியது எனவும், துக்காடாவை அவமான எடுத்தால் அவமானம் தான் எனவும் என்றும், சிறு துளி என்றாலும் துக்காடா என்றார்.

கமலஹாசன் லிப் சர்வீஸ் மட்டுமே செய்வதாக கூறிய பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் கருத்து குறித்த கேள்விக்கு, அவர்கள் தரத்திற்கான தகுதியை இந்த கமெண்ட் மூலம் நிரூபீக்கிறார்கள் என பதிலளித்தார்.

மேலும் படிக்க