உத்திரப் பிரதேசத்தில் மனைவியின் வாட்ஸ் அப் சாட்டை பார்க்க முயன்ற கணவரை மனைவி அரிவாளால் வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உள்ள பிலாவலி கிராமத்தில் வசித்து வருபவர் நேத்ரபால் சிங். இவருக்கும், நீது சிங் என்பவருக்கும் கடந்த 2015ம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ தொடங்கினர்.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை நேத்ரபால் சிங் வீட்டில் நிகழ்ச்சி ஓன்று நடந்துள்ளது. இதில் கலந்து கொள்ள நீது சிங் அங்கு வந்துள்ளார். அப்போது நீது சிங் வாட்ஸ் அப்மூலம் வேறொருவருடன் சாட்டிங் செய்து கொண்டிருந்தார். இதனை கவனித்த நேத்ரபால் நீ யாருக்கு குறுஞ்செய்தி அனுப்புகிறாய், உனது ஃபோனை கொடு என கேட்டுள்ளார். ஆனால், நீது சிங் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கணவர் அவரது மனைவியிடம் இருந்து வலுக்கட்டாயமாக போனை பிடுங்கி பார்த்துள்ளார். இதனால் கடும் கோபமடைந்த மனைவி, அருகில் இருந்த அரிவாளை எடுத்து தனது கணவரை வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த நேத்ரபால் உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனினும், பாதிக்கப்பட்டவர் தற்போது வரை காவல்நிலையத்தில் புகார் அளிக்காததால், நீதுவின் மீது வழக்கு பதிவு செய்யப்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு
ஷாலினி வாரியரை புதிய தலைமை செயல் அதிகாரியாக நியமித்தது கோஸ்ரீ ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம்
இந்தியாவிலேயே முதன் முறையாக உக்கடம் பகுதியில் சிங்க முகங்களுடன் வெண்கல அசோக தூண் திறப்பு