• Download mobile app
16 Sep 2025, TuesdayEdition - 3506
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் ஆப்பில் கைரேகை சென்சார் வசதி அறிமுகம் !

April 2, 2019 தண்டோரா குழு

வாட்ஸ்ஆப் அப்ளிகேஷனில் புதிய அப்டேட் மூலம் கைரேகை பாதுகாப்பு வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் வாட்ஸ்ஆப் மொபைல் அப்ளிகேஷன்னை பயன்படுத்துகின்றனர். அதற்கு ஏற்ப அந்நிறுவனமும் வாடிக்கையாளர்களுக்காக தொடர்ந்து புதிய அப்டேட்டை அளித்து வருகிறது. சமீபத்தில் 200க்கு மேற்பட்ட புதிய எமோஜிகளை இந்த நிறுவனம் வெளியிட்டது. தற்போது கைரேகை சென்சார் வசதி கைரேகை சென்சார் வசதி அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய வசதி சோதிக்கப்பட்டு வருகிறது.

இந்த புதிய அப்டேட் மூலம் ஸ்கிரீன் லாக் என்ற புதிய வசதி சேர்க்கப்படுகிறது. அதனைத் தேர்வு செய்யும்போது பின், பேட்டன் போன்றவற்றுடன் கைரேகை சென்சார் மூலம் வாட்ஸ்ஆப்பை லாக் செய்யும் வசதிகள் அளிக்கப்படுகிறது. வாட்ஸ்ஆப்பை இந்த முறையில் லாக் செய்தாலும் போன் லாக் செய்திருக்கும்போது வரும் வாட்ஸ்ஆப் அழைப்புகளை லாக் எடுக்காமலே பேச முடியும். இதேபோல போன் லாக் செய்யப்பட்ட நிலையில் வரும் மெசேஜுக்கும் பதில் அளிக்க முடியும்.

இந்த வசதிகளை பயன்படுத்த முதலில் போன் செட்டிங்ஸில் கைரேகை (மற்றும் முகம்) ஆகியவற்றைப் லாக் செய்வதற்கான வழிகளாக பதிவு செய்ய வேண்டும். ஏதாவது பிரச்னையால் கைரேகை சென்சார் அல்லது முக அடையாளம் மூலம் லாக் நீக்கப்பட முடியாதபோது, பின்கோடு மூலம் திறக்கும் வசதி இருக்கிறது. குறிப்பாக, ஐபோன் X (iPhone X) பயன்படுத்துபவர்களுக்கு கூடுதலாக முக அடையாளத்தை வைத்து லாக் செய்யும் வசதியும் இருக்கும். சோதனையில் இருக்கும் இந்த வசதி விரைவில் ஆண்ட்ராய்ட் மொபைல்களில் பயன்பாட்டுக்கு வரும் எனத் தெரிகிறது.

மேலும் படிக்க