சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் ஆப் உலக அளவில் அதிக பயனாளர்களை கொண்டுள்ளது.இதில், இந்தியாவில் மட்டும் 20 கோடிக்கும் அதிகமான வாட்ஸ்-ஆப் பயனாளர்கள் இருக்கின்றனர்.
வாட்ஸ் ஆப்பில் அவ்வப்போது தவறான தகவல்கள் பரவி வருகிறது.இந்நிலையில், தவறான தகவல்கள், மோசமான வீடியோக்களை வாட்ஸ்-ஆப் அல்லது ஃபேஸ்புக் குரூப்பில் பகிர்ந்தால், குரூப் அட்மினுக்கு ஜெயில் தண்டனை வழங்கலாம் என்று வாரணாசியின் மாவட்ட நீதிபதி மற்றும் காவல்துறை கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில்,
பல வாட்ஸ்-ஆப் மற்றும் ஃபேஸ்புக் குரூப்களில் உண்மை இல்லாத பல செய்திகள் பரவ விடப்படுகின்றன. இந்த மாதிரி தகவல்கள் சரியாகத் தான் இருக்கிறதா என்று பார்க்கமாலேயே பகிரப்படுகின்றன. அப்படிப்பட்ட தகவல்களை பரவவிடும் குரூப்பில் இருக்கும் நபரை குரூப் அட்மின் நீக்க வேண்டும். அந்த குறிப்பிட்ட நபர் பற்றி அருகில் இருக்கும் காவல்துறையில் புகார் கொடுக்க வேண்டும். குரூப் அட்மின் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் அல்லது வாட்ஸ்-ஆப் குரூப்பில் பரவும் தவறான தகவல்கள் மற்றும் மோசமான வீடியோக்களால் பல பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு