• Download mobile app
16 Dec 2025, TuesdayEdition - 3597
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

வாட்ஸ் அப்பில் “போட்டோ பன்ட்லிங்” அறிமுகம்

June 28, 2017 தண்டோரா குழு

சமூக வலைத்தளங்களில் ஒன்றான வாட்ஸ் அப் இளைஞர்கள் மத்தியில் பிரசித்தி பெற்றது. போட்டோ பன்ட்லிங் Photo Bundling என்னும் புதிய அம்சத்தை வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப் அப்ளிகேஷன் உலகில் அதிகம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், வாட்ஸ் அப்பில் பல புதிய வசதிகளை அந்நிறுவனம் சமீப காலமாக அப்டேட் செய்து வருகிறது.

இந்நிலையில், போட்டோ பன்ட்லிங்(Photo Bundling) என்னும் புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போட்டோவை ஒன்று ஒன்றாக அனுப்புவதை விட, அதை ஒரு ஆல்பமாக அனுப்பலாம்.

அதேபோல், வாட்ஸ் அப் கால்களின் தோற்றத்தில் சிறிது மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. பொதுவாக இடதுபுறத்திலிருந்து வலதுபுறமாக தான் கால்கள் அட்டென்ட் செய்வது வழக்கம். ஆனால் தற்போது, கீழிருந்து மேலாக கால்கள் அட்டென்ட் செய்ய முடியும்.

மேலும், அனைத்து வகை பைல்களையும் வாட்ஸ் அப் மூலம் ஷேர் செய்ய முடியும் என்றும், ஆண்ட்ராய்டு, ஐபோன் மற்றும் விண்டோஸ் தொலைபேசி ஆகியவற்றின் மூலமாகவும் இந்த புதிய அப்டேட்டை உபயோகப்படுத்த முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க